தற்போதைய செய்திகள்

பழங்குடியின மக்களுடன் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - பிரதமர்
  • 16th February 2018

பழங்குடியின மக்களுடனான சமரச முயற்சிகளை தமது அரசாங்கம் முன்னெடுக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ உறுதியளித்துள்ளார்.

உரிமை சார் முறைமையின் அடிப்படிடையில் பழங்குடியின மக்களுடன் கனடிய அரசாங்கம் இணைந்து இரு தரப்பினர்களுக்கும் இடையிலான பிணக்குகளுக்கான தீர்வு காணப்படும் என்றும் அவர் விபரித்துள்ளார்.

பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் முன்னைய அரசாங்கங்கள் உரிய முறையில் செயற்படவில்லை என்றும் பிரதமர் இதன்போது குறைகூறியுள்ளார்.

இந்த நிலையில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்புகளை தமது அரசாங்கம் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ள அவர், இதன் மூலம் பழங்குடியின மக்கள் தமக்கான எதிர்காலம் குறித்த முடிவுகளை அவர்களே மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

comments powered by Disqus