தற்போதைய செய்திகள்

அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு
  • 20th February 2018

அரசின் பல்வேறு துறைகளில் தேவையற்ற பணியிடங்கள் என்னென்ன உள்ளது? என்பதை கண்டறிந்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் செலவுகளை குறைக்கும் முயற்ச்சியாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அயல் பணி, ஒப்பந்த அடிப்படையில் செய்யக்கூடிய பணி ஆகியவற்றை அடையாளம் காணும் பணியையும் இந்த குழு மேற்கொள்ளும். எந்தெந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்பதையும் இந்த குழு பரிந்துரை செய்யும்.
 
 
6 மாதங்களில் இந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

comments powered by Disqus