தற்போதைய செய்திகள்

ஜோர்ஜ்டவுன் வீட்டில் தீ விபத்து - ஒருவர் பலி
  • 19th February 2018

வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பமவ் ஒன்று ஜோர்ஜ்டவுன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

Raylawn Crescent பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் இருந்து , நேற்று இரவு 10.30 அளவில் புகை வெளியாவதை அவதானித்த அக்கம்பக்கத்தார் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்திருந்தனர்.

துரிதமாக செயறப்ட்ட தீயணைப்புப் படையினர் அந்த வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து, வீட்டினுள் தேடிடுதல் நடாத்திய போது அங்கே இருந்து ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

எனினும் உயிரிழந்த அந்த நபர் தொடர்பிலான விபரங்களை அவர்கள் உடனடியாக வெளியிடவில்லை. அத்துடன் இந்த தீப்பரவலுக்கான காரணங்களும் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

comments powered by Disqus