தற்போதைய செய்திகள்

உடல் நலக்குறைவு காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதி
  • 18th February 2018

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
 
இதனையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி 2’ படத்திலும் விஷால் நடித்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக படக்குழுவினர் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வந்த சண்டக்கோழி - 2 படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு திடீரென உடல் நலக்குறைவால் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விஷால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

comments powered by Disqus