தற்போதைய செய்திகள்

பல் சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
  • 17th February 2018

பல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 4 வயது சிறுமி ஒருவருக்கு, மருத்துவரின் தவறான சிகிச்சை முறையால் மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கனடா நாட்டில், கடந்த 2016ஆம் ஆண்டு Amber Athwal எனும் 4 வயது சிறுமி, பல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்கு முன்னர் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை முடிந்த பின்னர் சிறுமிக்கு இதயத் துடிப்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக, குறித்த சிறுமி பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மருத்துவ நிர்வாகத்தில் 6 நாட்கள் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது தான், சிறுமி சிகிச்சை அளித்த மருத்துவர் வில்லியம் மேதர், உரிய சிகிச்சை முறைகளை சரியாக கையாளவில்லை என்று தெரிய வந்தது. மேலும், ஏற்கனவே அவர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது.

சிறுமிக்கு இதயத் துடிப்பு பிரச்சனை ஏற்பட்டபோது, மேதர் மற்றும் அவரது ஊழியர்கள் சிறுமிக்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ள தயாராக இல்லை. அதனுடன், சிறுமி மயக்க நிலையில் இருந்த போது, மேதர் மற்ற நோயாளிகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டார்.

இதன் காரணமாக மருத்துவர் வில்லியம் மேதர் மீது, மருத்துவ நெறிமுறைகளை கடைபிடிக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பான விசாரணையின் அடுத்த கட்டம் தொடங்கியுள்ளது. அதில் மருத்துவர் தனது தவறுகளுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும்.

அவருக்கு தண்டனை வழங்குவது குறித்த முடிவுகளை, நீதிமன்றம் அதன்பிறகு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

comments powered by Disqus